பாலியல் வன்கொடுமை: பள்ளி செயலாளரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அம்பையில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

அம்பாசமுத்திரத்தில் பத்தாம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளிச் செயலாளரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க , முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் சிறுமிக்கு பள்ளியின் செயலாளரின் ஓட்டுநர் மணிக்குமார் என்பவர் பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார். தந்தையை இழந்த அந்தப் பெண்ணின் தாய் பள்ளி நிர்வாகத்தின் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளி நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியதாகவும் தொடர்ந்து மாணவிக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அனுப்பியதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தினை கண்டித்து பள்ளிச் செயலாளர் , தலைமை ஆசிரியர் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக அம்பை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களை கைது செய்யக்கூடாது எனக் கூறி சிலர் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அம்பாசமுத்திரம் காவல் துறை கண்காணிப்பாளர் சதீஷ் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் . இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மற்றவர்களை கைது செய்ய வலியுறுத்திய விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் முத்து வளவன் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அனிதாவிடம் மனு அளித்து திரும்பி சென்றனர்.

More News >>