சேரன்மகாதேவியில் ஓசியில் பெட்ரோல் போட்ட ரவுடி சரவணன் : அப்புறம் நடந்தது என்ன?
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர் தீபக்ராஜன் கொலை வழக்கு, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர். இவரது பெயர் ரவுடிகள் பட்டியலில் உள்ளது.
இந்நிலையில் நேற்று இவர் சேரன்மகாதேவியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார். தொடர்ந்து, பெட்ரோல் நிரப்பிவிட்டு அதற்கான பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார்.
அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பணம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி சரவணன், பங்க் ஊழியர்களை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் , பெட்ரோல் பங்கை அரிவாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
இதுதொடர்பாக , பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சேரன்மகாதேவி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி சரவணனை வலைவீசி தேடி வருகின்றனர்.