ரோடு ஷோவுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு கன்னியாகுமரி காங்கிரஸ் நன்றி

கரூரில் நடந்த தவெக பிரசார கூட்டத்தின் போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுசெயலாளர் ஆர்.எஸ்.ராஜன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் டாக்டர். சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ரோடு ஷோவை தமிழகத்தில் தடை செய்ய கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்று தமிழக அரசும் ரோடு ஷோவுக்கு தடை விதித்தது. இந்த நிலையில், தங்கள் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றி தந்த தமிழக அரசுக்கு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரசார் தரப்பில் நன்றி தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

More News >>