இளவரசர் லூயில் ஆர்தர்- முதல் புகைப்படம் வெளியிட்ட பிரிட்டன்!
பிரிட்டன் அரியணையின் ஐந்தாம் வாரிசு இளவரசர் லூயிஸ் ஆர்தர் சார்லஸின் புகைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ரிட்டன் இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம்ஸ் ஆவார். இளவரசர் வில்லியம்ஸ்-க்கும் அவரது காதல் மனைவி கேட் மிடில்டனுக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை மூன்றாவது குழந்தை பிறந்தது.
இக்குழந்தைக்கு அரச குடும்பத்தினர் 'இளவரசர் லூயிஸ் ஆர்தர் சார்லஸ்' எனப் பெயர் சூட்டியுள்ளனர். இனி இளவரசர் லூயிஸ் 'கேம்பிரிட்ஜின் இளவரசர் லூயிஸ்' என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் வில்லியம்ஸ்- கேட் மிடில்டன் தம்பதியர் தங்களது மூன்றாவது குழந்தையுடன் கடந்த வாரம் மக்கள் முன்னிலையில் தோன்றினர். இந்நிலையில் கடந்த மே 2-ம் தேதி இளவரசி சார்லெட் தனது மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இதையொட்டி நடந்த விழாவில் சார்லெட் தன் தம்பி லூயிஸைக் கொஞ்சுவது போன்றதொரு புகைப்படமும், இளவரசர் லூயிஸ் படுக்கையில் படுத்திருக்கும் நிலையில் உள்ள புகைப்படமும் அரச குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் லூயிஸ் புகைப்படம் தற்போது ஆன்லைன் வைரல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com