இவள் என் மர்யம்..!- உருகும் துல்கர் சல்மான்
நடிகர் துல்கர் சல்மான் தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகர் துல்கர் சல்மான் பிடித்துள்ள இடம் மிகப்பெரியது. சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவராக இருந்தாலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்துக்கொண்டுள்ளார்.
துல்கர் சல்மான் மற்றும் அவரது மனைவி அமால் சூஃபியா தம்பதியருக்கு கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மர்யம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இக்குழந்தை நேற்று தன்னுடைய முதல் பிறந்தநாளைக் கொண்டாடினாள்.
தன் மகளின் முதல் பிறந்தநாளையொட்டி மகளுடன் உள்ள தன் குடும்பப் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதளத்தில் நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். ’மகள்கள் தான் என்றுமே சிறந்தவர்கள்’ என பாசத் தந்தையாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழையாகப் பொழிந்துள்ளார்.
துல்கர் சல்மானின் குடும்பப் புகைப்படம் தற்போது நாடு முழுவதும் வைரலாகி வருவதுடன் மர்யமுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துகளும் கடந்த இரண்டு நாள்களாகக் குவிந்து வருகின்றன.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com