உடன்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் கொலை: வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்
திருச்செந்தூர் அருகே உடன்குடி அனல் மின் நிலைய வட மாநில ஒப்பந்தக்காரர் கொலை செய்யப்பட்டார். அவர் முதலீடு செய்த ரூ.1 கோடி பணத்தை திருப்பி தர கோரி தொழிலாளர்கள் சுமார் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செந்தூர் அருகே உடன்குடியில் 660 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 3,000 வட மாநில தொழிலாளர்கள் ஒப்பந்த பணியில் பணி செய்து வருகின்றனர். இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் பிரசாத் (53). என்பவர் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு குலசேகரன் பட்டினம் அரசு மதுபான கடையின் பின்புறம் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.
இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.இந்த நிலையில் ஒப்பந்தக்காரர் அர்ஜுன் பிரசாத் முதலீடு செய்த ஒரு கோடி ரூபாய் பணத்தை தர கோரி குடும்பத்தினர் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் ஆயிரம் பேர் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் போராட்டத்தில் ஈடுபட்ட வருடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அனல் மின் நிலைய கட்டுமான பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.