ஜோஸ்னா சின்னப்பாவுக்கு ரூ.30 லட்சம் பரிசு: முதல்வர் வழங்கினார்
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பாவுக்கு ரூ.30 லட்சம் பரிசு தொகையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
ஆஸ்திரேலியா, கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரை 21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா மொத்தம் 60 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தது.
மேலும், தமிழகத்திற்கு பெருமை சேர்த்த 5 விளையாட்டு வீரர்கள், 1 வீராங்கனை மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் 8 பேருக்கு ரூ.4 கோடியே 44 லட்சம் காசோலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 24ம் தேதி தலைமை செயலகத்தில் வழங்கினார்.
இதைதொடர்ந்து, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பாவிற்கு ரூ.30 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி, பாராட்டினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com