விஜய் எதை செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும் - திருச்செந்தூரில் சிவராஜ்குமார் பேட்டி
நடிகர் விஜய்க்கு எதை செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும் என கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் அறிவுரை கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் சுவாமி தரிசனம் செய்தார் . பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது, ' 'நான் பிறந்து வளர்ந்தது சென்னை என்றாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை . தற்போது , அந்த ஆசை நிறைவேறியுள்ளது. முதல் முறையாக இங்கு வந்துள்ளேன். நண்பர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவும் செய்துள்ளேன். கன்னடத்தில் 45 என்ற படம் அனைத்து மொழிகளிலும் டிசம்பரில் வெளியாகி உள்ளது. அதுபோக இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். மேலும் ஜெயலர்- 2 படபிடிப்பு நடந்தது வருகிறது. எங்கே சாந்தி, எங்கே நிம்மதி கிடைக்குமோ அங்கு ரஜினி செல்வார் அவர் ஒரு வித்தியாசமான மனிதர்.
விஜய் அரசியலுக்கு வந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அவருக்கு வாழ்த்து சொல்கிறேன். கரூர் சம்பவம் ஒரு மனிதனாக வருத்தப்படக் கூடியது . அது ஏன் நடந்தது? எப்படி நடந்தது என்பது? குறித்து எனக்கு தெரியாது. தமிழக அரசியல் பற்றி எனக்குப் போதிய அறிவு இல்லை நடிகர் மற்றும் சகோதரரான விஜய்க்கு நான் சொல்வது ஒன்றுதான். எதை செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும் 'என தெரிவித்தார்.