பெண் குழந்தையை வாஷிங் மிஷினில் போட்டு கொலை செய்த தாய்

 

காஜியாபாத்: ஆண் குழந்தை பிறக்காத விரக்தியில், பிறந்து மூன்றே மாதம் ஆன பெண் குழந்தையை தலையணையால் நெறித்து, வாஷிங் மிஷினில் போட்டு தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஜியாபாத், பாட்லா பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (22). இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்த்தி தனது குழந்தையை காணவில்லை என போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பின்னர், போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் ஆர்த்தி தான் குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.சம்பவம் குறித்து, உயர் போலீஸ் கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர் கூறுகையில்,” ஆர்த்தி ஆண் குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்த்து இருந்துள்ளார். ஆனால் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஆர்த்தி குழந்தையை கொலை செய்ய துணிந்துள்ளார். முதலில் தலையணையை கொண்டு குழந்தையை நெறித்து, பின்னர் மூச்சு திணறி மயங்கிய குழந்தையை வாஷிங் மிஷினில் போட்டு கொலை செய்துள்ளார். இதன்பின்னர், தனது குழந்தையை காணவில்லை என ஆர்த்தி நாடகமாடி உள்ளார். இந்த கொலையை அவர் தான் செய்தார் எனவும் ஆர்த்தி ஒப்புக் கெண்டார். மேலும், ஆர்த்தியின் குடும்பத்தினரிடம் விசாரிக்கையில் தாங்கள் யாரும் ஆண் குழந்தை தான் வேண்டும் என வற்புறுத்தவில்லை என கூறி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

 

More News >>