பிரசவத்துக்குப் பின் மீண்டும் களம் காணுவேன்- சானியா மிர்சா சவால்
பிரசவத்துக்குப் பின் மீண்டும் களம் திரும்புவேன் என தாய்மை உற்சாகத்தில் அறிவித்துள்ளார் சானியா மிர்சா.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் உடன் பல்வேறுகட்ட சிக்கல்களுக்குப் பின் சானியா மிர்சாவுக்குத் திருமணம் நடந்தது.
பல தரப்பு விமர்சனங்களையும் புறம் தள்ளிவிட்டு கணவன், மனவி இருவரும் அவரவர் களத்தில் அனல் பறக்க விளையாடி அவரவர் நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர். இத்தம்பதியினர் கடந்த மாதம் தாங்கள் விரைவில் பெற்றோர் அந்தஸ்தைப் பெறப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்நிலையில், வருகிற 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் சானியா மிர்சா கலந்துகொள்ளமாட்டாரா? என்றும் இந்தியாவுக்கு டென்னிஸில் பதக்கம் இல்லையா? என்றும் தொடர் விமர்சனங்கள் எழுந்து வந்தன.
இந்நிலையில், பிரசவத்துக்குப்பின் வெகு சீக்கிரமே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மீண்டும் டென்னிஸ் களம் திரும்புவேன் என சானியா அறிவித்துள்ளார். மேலும், ’தாய்மையைக் காரணமாக வைத்துப் பெண்கள் ஒருநாளும் தங்கள் கனவை இழக்கக்கூடாது’ என்றும் சானியா அரிவுறுத்தியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com