விஷால், அர்ஜூன் அதிரடி நடிப்பில் இரும்புத்திரை டிரைலர் ரிலீஸ்
மித்ரன் இயக்கத்தில், விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் வரும் மே 11ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் இரும்புத்திரை.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் அசத்தல் வில்லனாக அர்ஜூன் நடித்துள்ளார். கடல் படத்திற்கு பிறகு அர்ஜூன் இரும்புத்திரையில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்த நிலையில், தற்போது டிரைலரை படக்குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர். டிரைலர் அதிரடியாக இருப்பதாகவும், இதனால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ இரும்புத்திரை படத்தின் டிரைலர்:
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com