ஆன்மீக பார்வையில் திருக்குறள்: நெல்லையில் நூல் வெளியீடு

இளைய தலைமுறையினர்  திருக்குறளை ஆன்மீக கண்ணோட்டத்தில் அணுகும்  வகையில் ஆன்மீக பார்வையில் திருக்குறள் என்ற புத்தகம் நெல்லையில் வெளியிடப்பட்டது. 

"ஒன்றே குலம் !  ஒருவனே தேவன்" என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள  பாப்பாக்குடியில் 1963 ம் ஆண்டில் இருந்து "மனுஜோதி ஆசிரமம்" இயங்கி வருகிறது. இந்த  அமைப்பின் சார்பில் நெல்லை வண்ணாரப்பேட்டையில்  ஆன்மீக பார்வையிலான திருக்குறள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  

இந்த  திருக்குறளுக்கு  ஆன்மீக கண்ணோட்டத்தில் ஸ்ரீலஹரி கிருஷ்ணா இலக்கணம் எழுதியுள்ளார்.  இந்த புத்தகத்தை வழக்கறிஞர் சிவ பத்மநாபன் வெளியிட வழக்கறிஞர் ராமநாதன் மற்றும் லயன்ஸ் கிளப் துணை ஆளுநர் ஜான் சுபாஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மதமில்லாத மனிதர்களாக வாழ ஆசைப்படும்  மனிதர்களின்  வேத நூலாக திருக்குறள்  பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

More News >>