விஸ்வாசம் படத்தில் யாருக்கு தான் முக்கியத்துவம்?
விஸ்வாசம் திரைப்படம் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடத்தப்பட்டு இந்த தீபாவளிக்கு திரையிடவேண்டும் என்ற ஆர்வத்தோடு படக்குழு வேலைகளை செய்து வருகிறது.
இயக்குனர் சிறுத்தை சிவா அஜித்குமார் நான்காவது முறையாக வெற்றி கூட்டணியாக சேர்ந்திருக்கும் படம் தான் விஸ்வாசம். சத்திய ஜோதிஃபிலிம்ஸ் தயாரிப்பில் டி.இமான் இசையமைப்பாளராகவும்,படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
ஏற்கனவே பில்லா, ஆரம்பம், ஏகன் போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளன. விஸ்வாசம் படத்தில் நயன்தாராவிற்கு தான் முக்கியமான கதாபாத்திரம் தர வேண்டும் என அஜித் இயக்குனர் சிவாவிடன் கூறியுள்ளார்.
எனென்றால் நானும் ரவுடி தான், அறம், மாயா, டோரா ஆகிய படங்களில் நாயகி முக்கியத்துவ படங்களில் நயன் வெற்றி பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து நயன்தாராவிற்கே முக்கியத்துவம் தரவேண்டுமென சிவாவிடம் அஜித்குமார் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com