பூக்குழி கிராமத்தில் குடிநீர் இணைப்புக்காக 4 ஆண்டுகளாக காத்திருக்கும் தண்ணீர் தொட்டி

திருநெல்வேலி மாவட்டம் பூக்குழி கிராமத்துக்கு முறையாக தண்ணீர் வழங்காததை கண்டித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தண்ணீர் குடங்களுடன் மக்கள் முற்றுகையிட்டனர். 

இது தொடர்பாக பூக்குழி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,  தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தண்ணீர் தொட்டிக்கு தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில் இதுவரை தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. தண்ணீர் திறந்து விடும் திடியூரை சேர்ந்த ஊழியர்கள் சரி வர பணி செய்வதில்லை. அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழாக்குறிச்சியில் இருந்து எங்கள் ஊருக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.

எங்கள் கிராமத்தின் வடக்கு பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆழ்துளை கிணறு நீரேற்று இயந்திரம் ஒரு வருடமாக பழுதடைந்துள்ளது. இதை சரி செய்து தர வேண்டும். ஒரு மாத காலமாக எங்கள் ஊருக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. கடந்த வாரமும் , இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருந்தோம். ஆனால், குறைகள் தீர்க்கப்படாததால், மீண்டும் இந்த மனுவை அளிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

More News >>