புதிய 3மெட்ரோthinspthinsp ரயில் நிலையங்களுடன் சுரங்க நடைபாதைகள் இணைப்பு

சென்னை மெட்ரோ என்பது நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான மெட்ரோ ரயில் உருவாக்கப்பட்டது. முதல் கட்ட சேவையாக கோயம்பேடு, ஆலந்தூர், சின்னமலை, விமான நிலையம் திருமங்கலம், நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்கு வரத்து செயல்பட்டு வருகிறது.

பொது மக்களிடையே மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரவேற்பை தொடர்ந்து சென்னை முழுவதும் மெட்ரோ ரயில் திட்டம் விரிவுப்படுத்தும் பணிகள் நடக்கிறது.விரைவில் புதிய வழித்தட பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. புதிதாக நேருபூங்கா இருந்து சென்ட்ரல் வரை அடுத்து சைதாப்பேட்டையிருந்து டி.எம்எஸ் வரையிலான பணிகள்  நடைப்பெற்றுள்ளன..

புதிய 3மெட்ரோ   ரயில் நிலையங்களுடன் அண்ணா சாலையை கடப்பதற்கு  அமைக்கப்பட்ட சுரங்க நடைபாதைகள் இணைக்கப்படவுள்ளது. இந்த வழியாக செல்லும் பாதசாரிகள், பயணிகள் எளிதில் மெட்ரோ நிலையத்துக்குள் செல்ல முடியும். இதற்கான பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் நெடுஞ்சாலை துறை அனுமதி கொண்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>