தொடங்கியது வடகிழக்கு பருவமழை - நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

குமரிக்கடல் அருகே வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நமது வானிலை பக்கத்தின் சார்பாக வானிலை முன் கணிப்பின்படி அக்டோபர் எட்டாம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்று முன்னரே தெரிவித்து இருக்கிறேன்...!!

அதன்படி தென் மாவட்டங்களில் நேற்று தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர் பலத்த மழையாக பெய்து கொண்டிருக்கிறது...!!

அது இன்னும் இரண்டு நாட்கள் தொடரும்...!!

இன்றைய வானிலை அமைப்பின்படி விஜயராமபுரம் சாத்தான்குளம் மெஞ்ஞானபுரம் நாசரேத் குரும்பூர் முக்காணி ஏரல் குரங்கணி தென்திருப்பேரை திருவைகுண்டம் பேய்குளம் சேரகுளம் புளியங்குளம் கிருஷ்ணாபுரம் சிவந்திபட்டி மூலைக்கரைப்பட்டி திருநெல்வேலி நாராயணமாள்புரம் சீவலப்பேரி தாழையித்து கங்கை கொண்டான் மணியாச்சி மிக கன மழை பெய்யும்...!!

கன்னியாகுமரி நாகர்கோவில் பணகுடி வள்ளியூர் நாங்குநேரி மணப்பாடு திருச்செந்தூர் காயல்பட்டினம் தூத்துக்குடி கோயில்பட்டி விளாத்திகுளம் முக்கூடல் ஆலங்குளம் சிவகாசி ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாயல்குடி கமுதி திருப்பத்தூர் கனமழை பெய்யும்...!!

அறந்தாங்கி இலுப்பூர் நத்தம் விராலிமலை திருச்சி வேதாரணியம் பவானி ஈரோடு மேட்டூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி போளூர் பாண்டிச்சேரி கடலூர் சென்னை கன மழை பெய்யும்...!!!

கொட்டித் தீர்த்த கனமழை - நெல்லையில் விடுமுறை

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை தொடருவதால் தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>