பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் 65வது பிறந்த நாள் இளைஞரணி சார்பில் பாபநாசம் கோவிலில் சிறப்பு வழிபாடு

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, வருகின்ற அக்டோபர் 16-ஆம் தேதி அன்று திருநெல்வேலி மாவட்ட பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு பிரசித்தி பெற்ற பாபநாசம் சிவன் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு திருநெல்வேலி வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மதியம் 02:00 மணி முதல பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகம் முன்பு, போக்குவரத்து விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு இளைஞர் அணி சார்பாக தலைக்கவசங்கள் வழங்கப்படும்.

மாலை 6மணிக்கு புகழ்பெற்ற நெல்லையப்பர் திருக்கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்படும். இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சிகள் அனைத்தும், நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம் அவர்களின் தலைமையில், நெல்லை மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் கந்தசாமி அவர்களின் ஏற்பாட்டின் பேரில், பாஜக இளைஞரணி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>