திருநெல்வேலி பொதுப்பணித்துறை அலுவலகம் : ஆ்த்தி... ஒருநாள் கணக்கில் வராத பணம் 2.94 லட்சம்
திருநெல்வேலி பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 94 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜோசப் ப்ரீஸ், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து அரசு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்க லஞ்சம் வா்ங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (அக்16)மாலை அவரது அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் முடிவில், கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் 2,94,500 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் திருநெல்வேலி அரசுத் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை தொடர்பாக செயற்பொறியாளர் ஜோசப் ப்ரீஸ் ஜோசப் ப்ரிஸ் மற்றும் சதாசிவம், செல்வம், ராம முருகேசன் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும் , தீபாவளி வசூலா என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.