நெல்லை மேற்கு மாநகர திமுக: பருவமழையை எதிர்கொள்ள ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

நெல்லை மாநகரப் பகுதிகளில் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில், பகுதி வாரியான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒருங்கிணைப்புக் குழுவில், நெல்லை பேட்டை கிழக்கு, பேட்டை மேற்கு, தச்சநல்லூர் வடக்கு, திருநகர் மற்றும் டவுண் பகுதிக்கு எனப் பகுதி பொறுப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், இளைஞரணி, வர்த்தக அணி, மாணவரணி, விவசாய அணி உள்ளிட்ட பல்வேறு அணியின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மழைநீர் தேக்கம், மரம் விழுதல், மின்வெட்டு, மின்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், பொதுமக்கள் நெல்லை மாநகர திமுக அலுவலகத்தை அல்லது 87547-98163 என்ற வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் . இந்தப் பணிகளில் பகுதி நிர்வாகிகள், மாநகர பிரதிநிதிகள், வட்டச் செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து வார்டு வாரியாக பொது மக்களுக்கு உதவ வேண்டும் .

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More News >>