ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிப்பு
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட இருந்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிலா மறைந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்றைய தேதி கடைசியாக அறிவிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், வேட்புமனு மீதான பரிசீலனை இன்று காலை முதல் துவங்கியது. இதில், திமுக, அதிமுக, தினகரன் ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டது. இந்நிலையில், படிவம் 26ஐ பூர்த்தி செய்யாததே ஜெ.தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்களை வாபஸ் பெற 7ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.