இந்தியாவில் தான் ஏராளமான புத்திசாலிகள் இருக்கின்றனர் - பில்கேட்ஸ்
வாஷிங்டன் நகரில் பொது சுகாதாரத் துறையில் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளதாக உலகின் முதன்மையான பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தெரிவித்தார். எனினும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் தூய்மை ஆகிய இரு பிரிவுகளில் இந்தியா இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.
மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ், தற்போது "பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்' என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் மருத்துவ சேவையாற்றி வருகிறார். இந்தியாவிலும் அந்த அமைப்பு குறிப்பிடத்தக்க சேவைகளை செய்திருக்கிறது.
இந்தியாவின் மருத்துவ தரம் குறித்து அவர் பேட்டியளித்தார் அதில், ‘ இந்தியாவில் பொது சுகாதார நிலையை பற்றி எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பல்வேறு கதைகளை உள்ளடக்கியது அந்தத் துறை. ஆனாலும், செயல்பாடு நன்றாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் நிபுணத்துவம் நல்ல நிலையில் முன்னேறியிருக்கிறது.
ஆனால், குழந்தைகள் நலனுக்கான ஊட்டச்சத்துகளை அளிப்பதிலும், வாழ்வியலை அழகானதாக மாற்றும் துாய்மை துறையிலும் இந்தியா இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டியிக்கிறது. இந்தியாவை நான் எப்போதும் விரும்புவேன். இங்குதான் ஏராளமான புத்திசாலிகள் இருக்கின்றனர். துடிப்புமிக்க ஜனநாயகத்தையும், பலதரப்பட்ட கருத்துகளையும் கொண்டது இந்தியா.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எனக்கு நீண்டகாலமாக தெரியும். அவர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்பில் உள்ளவர். இந்தியாவில் உள்ள ஆழ்ந்த திறமை காரணமாகவே எங்களது 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியை பெற முடிந்தது’. இவ்வாறு கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com