நெல்லை பெண் ஆண்லைனில் பல லட்சங்களை இழந்த சோகம்

திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைனில் பகுதிநேர வேலை மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்ற சைபர் கொள்ளையர்களின் ஆசை வார்த்தையை நம்பி, பல தவணைகளாக மொத்தம் ரூ. 17.89 லட்சத்தை இழந்துள்ளார்.

திருநெல்வேலி சேர்ந்த பெண் ஒருவருக்கு, ஜூன் 13, 2025 அன்று, '@sandeepji_125' என்ற டெலிகிராம் கணக்கிலிருந்து, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வந்துள்ளது.

அவர் பதிலளித்ததும், '@vishalmadoth' என்ற மற்றொரு டெலிகிராம் கணக்கிலிருந்து தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை காட்டி, ஒரு இணையதளத்தில் பதிவு செய்ய வழிகாட்டியுள்ளார்.

*நம்பிக்கை ஏற்படுத்திய மோசடி*

ஆரம்பத்தில், மோசடி நபர்கள் அந்த பெண்ணின் நம்பிக்கையைப் பெறுவதற்காகச் சிறிய தொகைகளை முதலீடு செய்ய வைத்துள்ளனர். பாத்திமா தனது வங்கிக் கணக்கிலிருந்து முதலில் ரூ. 8,000 மற்றும் ரூ. 15,100 எனப் பணம் அனுப்பியுள்ளார். அதற்கு அதிக லாபம் கிடைத்துள்ளது.

தொடர்ந்து, அந்த பெண் இந்த ஆண்டு ஜூன் 13 முதல் ஜூலை 6ம் தேதி வரை, மோசடி நபர்கள் கொடுத்த பல வங்கிக் கணக்குகள் மற்றும் யுபிஐ ஐடிகளுக்கு (UPI IDs) தனது தனிப்பட்ட கணக்கிலிருந்தும், தனது தங்கை மற்றும் ஓட்டுநரின் வங்கிக் கணக்குகளிலிருந்தும், பல தவணைகளில் மொத்தமாக ரூ. 17,89,271பணத்தை அனுப்பியுள்ளார்.

*மேலும் பணம் கேட்டு மிரட்டல்*

இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்திய பிறகு, லாபத்துடன் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, மோசடி நபர்கள் மேலும் , பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் ஆன்லைன் மூலமாகப் புகார் அளித்தார்.

இது தொடர்பாக, அந்த பெண் அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி நபர்கள் தங்களது டெலிகிராம் உரையாடல் பதிவுகள் மற்றும் வங்கி விவரங்களை அழித்துவிட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் சண்முகவடிவு அவர்கள் தலைமையில் காவல்துறையினர் இந்த மோசடி வழக்கை விசாரித்து வருகின்றனர்.

More News >>