செஞ்சூரிலிங் - எத்தனை பேருக்கு கல்தா?
அமெரிக்காவில் லூஸியானாவை மையமாக கொண்ட தொலைதொடர்பு நிறுவனம் செஞ்சூரிலிங்.
கடந்த ஆண்டு லெவல் 3 கம்யூனிகேஷனுடனான இணைப்புக்குப் பிறகு புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்தல், நெறிபடுத்தல் ஆகிய நடவடிக்கைகளால் செஞ்சூரிலிங் நூற்றுக்கணக்கான பணியாளர்களை குறைக்க இருப்பதாக கூறியுள்ளது.
"இரு பெரிய நிறுவனங்களின் இணைப்பினால் அநேக பணிபொறுப்புகள் தேவையற்றவையாகி விட்டன. 2% பணியாளர்களை குறைக்க இருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு இன்னும் உயர்ந்த தரத்தில் சேவை செய்யும்படி சிறந்த பயிற்சி தருவதோடு, ஆட்டோமேஷனையும் அதிகப்படுத்துகிறோம்" என்று செஞ்சூரிலிங்க்கின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது கலோரடாவில் 7,800 பேர் பணிபுரிகிறார்கள். வேலையிழக்க இருக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்படாவிட்டாலும், 2% கணக்குப்படி செஞ்சூரிலிங் பணியாளர் 1,050 பேரின் வேலைக்கு ஆபத்து வரலாம் என தெரிகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com