தீபாவளி பண்டிகை : பட்டாசுவால் கண்களில் காயம் ஏற்பட்டால் நெல்லை வாஸன் ஐ கேரை அணுகலாம் !
திருவிழா காலத்தை முன்னிட்டு பட்டாசு வெடித்து கண்ணில் காயம் ஏற்பட்டால், குழந்தைகளின் பார்வை இழப்பை தடுக்க வாஸன் கண் மருத்துவமனை இலவச கண் பரிசோதனை முகாமை அறிவித்துள்ளது.
15 வயதிற்குக் குறைவான குழந்தைகள் இலவசமாக பரிசோதனை செய்யப்படும் . இந்த முகாம் முகாம் வரும் அக்டோபர் 25 ம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து வாஸன் கண் மருத்துவமனை மையங்களிலும், திருநெல்வேலி வாஸன் ஐ கேர் மையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் செந்தில் பிரசாத் (தலைமை மருத்துவர்,( ஃபேக்கோ சர்ஜன்) சுப்புலட்சுமி (மெடிக்கல் ரெட்டினா நிபுணர்) பொது கண் மருத்துவர்கள் சொக்கநாதன் ,சேதுலட்சுமி ,ராமலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர்.
இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாஸன்ஐ கேர் மருத்துவர்கள் கூறியதாவது, “பட்டாசு காயங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் நிரந்தர பார்வை இழப்பைத் தடுக்க உடனடி மருத்துவ சிகிச்சை மிக அவசியம். இத்தகைய அவசரநிலைகளை கையாள எங்கள் அனுபவமிக்க நிபுணர் குழு முழுமையாக தயாராக உள்ளது" என்றனர்.
பண்டிகை காலத்தில் குழந்தைகளை தங்கள் கண்காணிப்பில் வைத்து பட்டாசுகளை வெடிக்க செய்ய வேண்டும் என்றும் பட்டாசு வெடித்து கண் எரிச்சல் அல்லது காயம் ஏற்பட்டால் தாமதமின்றி மக்கள் வாஸன் கண் மருத்துவமனையை அணுகும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.