தீபாவளி பண்டிகை : நாகர்கோவில் எஸ்.ஐயின் மனிதாபிமானம்

தீபாவளியையோட்டி முன்னிட்டு, நாகர்கோவிலில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் முதியோர்களுக்கு தனது சொந்தச் செலவில் புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கிய காவல் உதவி ஆய்வாளரின் வீடியோ வைரலாகி வருகிறது

தீபாவளி பண்டிகை 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும், மாணிக்கம் நாகர்கோவிலில் தனது சொந்த செலவில் முதியவர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினார் .

மேலும் , இளங்கடை வடக்கு பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கும் புத்தாடைகளை வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் உதவி காவல் ஆய்வாளரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More News >>