70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் - தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

70 வயது நிரம்பியவருக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாபு தலைமையில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது,  70 வயது நிரம்பியோருக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்சமான 7, 850 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை காசில்லா மருத்துவ காப்பீடாக முறைப்படுத்திட வேண்டும், மத்திய அரசு வழங்குவது போல மருத்துவ படி ஆயிரம் வழங்க வேண்டும், மூத்த குடி மக்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து வசதி வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

More News >>