சிறுவயதிலேயே திருமணம் செய்து வைப்பது தான் நல்லது : பாஜக எம்எல்ஏ

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் லவ் ஜிகாத் ஆகியவையை கட்டுப்படுத்த சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று மத்திய பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ கோபால் பார்மர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. என்ன தான் மரண தண்டனை விதிக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்கொடுமைகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இதற்கிடையே, பாஜகவினர் இதுதொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக எம்எல்ஏ கோபால் பார்மர் என்பவர் பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைப்பது பெற்றோர்களுக்கு நல்லது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “பெண்ணின் திருமண வயது 18 என்பது ஒரு நோய். இந்த நோய் வந்த பின்னர் தான் பெண்கள் காதல் உள்பட பல சிக்கல்களில் சிக்கி கொள்கின்றனர். அந்த காலத்தில் சிறு வயதில் பெண்கள் திருமணம் செய்ததால் கணவர் மற்றும் உறவினர்களின் பாதுகாப்பில் இருந்தனர். அப்போது அவர்களுக்கு வன்கொடுமைகள் போன்ற தொல்லைகள் ஏற்படவில்லை” என்றார். பாஜக எம்எல்ஏவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>