மணல் கொள்ளையை தடுக்க முயன்ற நெல்லை பொலிஸார் அடித்து கொலை
By Isaivaani
நெல்லை மாவட்டம் விஜய நாராயணம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தனிப்பிரிவு காவலராக ஜெகதீஷ் துரை உள்ளார். பாண்டிச்சேரி அருகே உள்ள நம்பியாறு பகுதியில் இரவு நேரத்தில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து கொள்ளை நடக்கும் இடத்திற்கு ரோந்து பணிக்கு விரைந்தார் ஜெகதீஷ்.
அப்போது அங்கு ட்ராக்ட்டரில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்த சிலரை ஜெகதீஷ் கண்டித்ததுடன் அவர்களை கைது செய்ய முற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் ஜெகதீஷை எச்சரித்ததுடன், அவரை ட்ராக்ட்டருக்கு வழிவிட்டு நிற்கும்படி கூறியுள்ளது. அதற்கு ஜெகதீஷ் மறுத்து கொள்ளையர்களை தொடர்ந்து கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் ஜெகதீஷை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளது. ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில துடிதுடித்து இறந்துள்ளார் ஜெகதீஷ். பின்னர் ஜெகதீஷின் உடலை டிராக்டர் மோதி இறந்தது போன்று ஜெகதீஷின் உடல் அருகே சற்று தொலைவில் ட்ராக்ட்டரை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.
ரோந்திற்கு சென்ற ஜெகதீஷ் விடிந்தும் போலீஸ் நிலையம் திரும்பாததால் சந்தேகமடைந்த சக காவலர்கள் நம்பியாறு பகுதியில் தேடிச்சென்றனர். அப்போது ஜெகதீஷ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார், கொலை நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார் கக்கன் நகரை சேர்ந்த முருகன் மற்றும் மாடசாமி என்பவர்களை பிடித்ததுடன் தப்பியோடியவர்களை பற்றி விசாரித்து வருகின்றனர்.
மணற் கொள்ளை தடுக்க சென்ற போலீசை கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவம் நெல்லை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com