மழை கால நோய்களை தடுப்பது எப்படி? திருநெல்வேலி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் விஜயசந்திரன் பேட்டி

திருநெல்வேலி மாவட்டத்திலும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக்கால நோய்கள் குறித்த அச்சம் பொதுமக்களிடையே இயல்பாகவே அதிக அளவில் இருக்கும்.மழைக்கால நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் திருநெல்வேலி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் விஜயசந்திரன் கூறியதாவது,

*மழைக்கால நோய்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்:*

* காய்ச்சல் பொதுவானது:* பருவமழை காலங்களில், குறிப்பாக மழை நின்ற பிறகு, குளிர் காலத்தின் காரணமாக (நவம்பர், டிசம்பர் மாதங்களில்) சளி, இருமல், தும்மல் போன்ற பொதுவான *ஃப்ளூ (Common Flu) சார்ந்த காய்ச்சல் சற்று அதிகமாக இருக்கும்.* நீர் மற்றும் கொசுவினால் பரவும் நோய்கள்: மழைக்காலத்திற்குப் பிறகு, குடிநீரினால் பரவக்கூடிய வியாதிகள், மழை நீர் தேங்குவதால் அல்லது கழிவுநீர் கலப்பதனால் பரவக்கூடிய வயிற்றுப்போக்கு சார்ந்த வியாதிகள், மற்றும் கொசுக்கள் வளர்ந்து பரப்பும் *டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா* போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.* எலிக்காய்ச்சல்:மழை நீரில் நடக்கும்போது, சகதி மற்றும் மண்ணில் உள்ள நீருடன் கழிவுநீர் கலந்திருந்தால் அதன் மூலம் எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவவும் வாய்ப்புள்ளது.* பாதுகாப்பான குடிநீர்: மக்கள் கட்டாயம் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தண்ணீரை காய்ச்சி ஆறவைத்து குடிக்க வேண்டும்.

*யார் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும்?*

* உடனடி கவனம் தேவை:* சிறு குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் (சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற), மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோர் காய்ச்சல் வந்தவுடன் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற வேண்டும்.* தடுப்பூசி மற்றும் சிகிச்சை:காய்ச்சல் கண்டவுடன் அது சாதாரண ஃப்ளூவா, கொசுக்கடியால் வந்ததா, அல்லது அசுத்தமான குடிநீரால் வந்ததா என்பதைக் கண்டறிந்து, உரிய மருத்துவப் பரிசோதனை செய்து, உடனடியாகத் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.* உணவு முறை: காய்ச்சல் ஏற்பட்டால் சூடான உணவு, கஞ்சி, சூடான ஆகாரம் போன்றவற்றை உட்கொள்ளும் பட்சத்தில், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும்.

*அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்:*

* சிறப்பு வார்டுகள்:* பருவமழை காலங்களில் காய்ச்சலுக்கான *சிறப்பு வார்டுகள் (Special Fever Wards)* அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் சிறப்புப் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.* 24 மணி நேர சேவை: அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் தினசரி *24 மணி நேரமும்* காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்கக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.* நடமாடும் மருத்துவக் குழுக்கள்: திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை 11 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உள்ளன. இந்த 11 குழுக்களும் தினசரி 3 மருத்துவ முகாம்கள் வீதம் 33 மருத்துவ முகாம்களை 9 வட்டாரங்களிலும், மாநகராட்சி பகுதிகளிலும் நடத்துகின்றன.* பள்ளிக் குழந்தைகள் குழு: பள்ளிச் சிறுவர்கள் ஆரோக்கியம் காக்கும் 18 பள்ளிச் சிறார் சுகாதாரக் குழுக்கள் (School Health Teams - RBSK) உள்ளன. பள்ளி முகாம்கள் முடிந்த பிறகு, காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் பகுதிகளில் இந்தக் குழுக்கள் சென்று சிகிச்சை அளிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.* சுகாதார அறிவுரை மற்றும் அவசர ஊர்தி: பொதுமக்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு *104* என்ற மாநில அளவிலான பொதுச் சுகாதார அவசர எண்ணுக்கு அழைக்கலாம். அவசர சிகிச்சை தேவைப்பட்டால், *108 ஆம்புலன்ஸ்* மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறலாம்.

* *கண்காணிப்பு: ஒரு குறிப்பிட்ட பகுதியில் இரண்டிற்கும் மேற்பட்ட காய்ச்சல் சம்பவங்கள் கண்டறியப்பட்டால், அந்த இடங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்களின் வழிகாட்டுதலின்படி, அங்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, போர்க்கால அடிப்படையில் அனைத்து மருத்துவ வசதிகளும் வழங்கப்பட்டு, கிருமி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

*பொதுமக்களுககு சுகாதாரத் துறையின் வேண்டுகோள்:

பயம் வேண்டாம்: காய்ச்சல் கண்டு பொதுமக்கள் பயப்பட வேண்டாம். காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகி என்ன சோதனை என்று தெரிந்து, சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.

* வீட்டுச் சுத்தம்: உங்கள் வீட்டையும், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ளுங்கள்.* கொசுப்புழு ஒழிப்பு: கொசுப்புழுக்கள் தேங்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டின் மாடிகளில், பழைய பொருட்களில், உடைந்த பூந்தொட்டிகளில் நீர் தேங்காமல் உடனே அகற்ற வேண்டும். டேங்க்குகளை மூடி வைக்க வேண்டும்.* காலணி: சகதியில் நடக்கும்போது காலணிகளை அணிந்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More News >>