ஆஹா... இத்தனை திட்டங்களா? வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நெல்லையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் சார்பில் பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PMVBRY) திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிஅக். 28ம் தேதி நடைபெற்றது. சிப்காட் மற்றும் பேட்டை தொழிற் பூங்காவில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதியின் இந்த திட்டம் குறித்த விரிவாக விளக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில், அமலாக்க அதிகாரிகள் நாகேஸ்வரி மற்றும் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளக்கமளித்தனர். அவர்கள் கூறியதாவது,
மத்திய அரசின் பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் 01.08.2025 முதல் 31.07.2027 வரை அமலில் இருக்கும். இந்த திட்டம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதை ஊக்குவிப்பது, இளைஞர்களை வேலை வாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றுவது மற்றும் அனைத்து துறைகளிலும் குறிப்பாக உற்பத்தி துறையில் வேலை பாதுகாப்பை ஆதரிப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனாளிகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. அதில் பகுதி-அ, தொழிலாளர்களுக்கும், பகுதி-ஆ, வேலை அளிக்கக்கூடிய வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் இணைக்கப்பட்ட நிறுவனத்திற்குமானதும் ஆகும்.
பகுதி-அ:
இந்த திட்டம் 01.08.2025 -ந்தேதி முதல் 31.07.2027 -ந்தேதி வரை, இ.பி.எப்.ஓ -வில் பதிவு செயய்யப்பட்ட ஒரு நிறுவனத்தில் முதல் முறையாக வேலைக்கு சேரும் ஒரு தொழிலாளருக்கு அவரது ஒரு மாத ஊதியத்துக்கு சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை அதிகபட்சம் ரூ.15,000 வரை நிர்ணயிக்கப்பட்டு இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
பகுதி-ஆ:புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முதலாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. உற்பத்திதுறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முதலாளிகளுக்கு நான்கு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகையை வழங்குகிறது. இந்த திட்டத்தை பற்றிய முழு விவரங்களை pmvbry.epfindia.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் பகுதி ஆ -வை employer portal-லில் உடனடியாக ரெஜிஸ்ட்ரேரேசன் செய்யுமாறு அனைத்து நிறுவன முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.