பசுமையான நெல்லைக்கு குட்டீஸ்கள் செய்த பங்களிப்பு

பசுமையான நெல்லையை உருவாக்கும் வகையில் என் ஜி ஓ காலில் உள்ள தனியார் பள்ளியில் 25, 000 விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டது. பாலர் பள்ளி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து 25000 விதை பந்துகளை தயாரித்து பசுமை நெல்லை நகரை உருவாக்க தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர்.

புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மரம் நடும் பணி நாடு முழுவதும் நடந்து வருகிறது . அதன் ஒரு பகுதியாக பசுமையை உருவாக்கும் நோக்கத்தில் பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியிலுள்ள புனித சேவியர்ஸ் நர்சரி பள்ளியில் பசுமை இயக்கம் சார்பில் மாணவ- மாணவிகளிடம் மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக, விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. இதில் , பாலர் பள்ளி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 25, 000 விதை பந்துகளை தயாரித்தனர் .

வேம்பு, புளி, புங்கை, நாவல், எலுமிச்சை ,பேரிச்சை, பப்பாளி, சீதா, சப்போட்டா போன்ற பல்வேறு வகையிலான விதைப்பந்துகளை மாணவ - மாணவிகள் தயார் செய்தனர். அதிகப்படியான விதைப்பந்துகளை தயாரித்த மாணவ - மாணவிகளை பாராட்டி பரிசுகளும் வழங்கப்பட்டது . இந்த விதை பந்துகள் தகுதியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உலர விடப்படுமென்று புனித . சேவியர்ஸ் பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

More News >>