நெல்லை : மனைவிக்கு வளைகாப்பு நடந்த நிலையில், தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

பாளையங்கோட்டையில் குடும்ப பிரச்னை காரணமாக தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாளையங்கோட்டை கிருஷ்ணன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் மகன் மணிகண்டன் ( 27). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த இவரது மனைவிக்கு சில நாள்களுக்கு முன்னர் வளைகாப்பு நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக மணிகண்டனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரின் மனைவி தாயார் வீட்டுக்கு சென்ற நிலையில், மணிகண்டன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (நவ.1 )மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக அவர் கைப்பேசி அழைப்பை எடுக்காததால் நண்பர்கள் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளனர். வீட்டில் மணிகண்டன் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து. பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் ர உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

More News >>