வீராங்கனை எட்வீனாவுக்கு நெல்லை மாநகர திமுக சார்பில் பாராட்டு விழா

பஹ்ரைனின் ரிஃபா நகரில் நடைபெற்ற ஆசிய யூத் தடகளப் போட்டியில், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெல்லையை சேர்ந்த  இந்திய வீராங்கனை 16 வயதான எட்வினா ஜேசன் பங்கேற்றார். இந்த போட்டியில் 55.43 வினாடிகளில் இலக்கை கடந்து அவர் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். தொடர்ந்து, சொந்த ஊரான திருநெல்வேலிக்கு ரயிலில் திரும்பிய எட்வினா ஜேசனுக்கு, ரயில் நிலையத்தில் உறவினர்கள், நண்பர்கள், நாரணம்மாள்புரம் விளையாட்டுக் கழக வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், நெல்லை திமுக சார்பில் எட்வீனாவுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில், திருநெல்வேலி மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தி பேசினார். 

More News >>