பொய் வழக்க போடுவதாக திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது முடவன்குளம் மக்கள் புகார்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள முடவன்குளம் கிராம மக்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது , 'முடவன்குளம் கிராமத்தில் வசிக்கும் எங்கள் மீது திசையன்விளை காவல் நிலைய ஆய்வாளர் சீதா லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் அண்டோ பிரதீப் ஆகியோர் பொய் வழக்குகள் போடுகின்றனர். எங்கள் கிராமத்தில் நடக்கும் திருட்டுகள் குறித்து நாங்கள் புகாரளித்தால் கண்டு கொள்வதில்லை. வழக்கும் பதியப்படுவதில்லை. ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர். இதனால், எங்கள் கிராம மக்களின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுகிறது. நாங்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் காணப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். '
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.