நெல்லையப்பர் கோயில் அறங்கவலராக செல்லையா தேர்வு

திருநெல்வேலி மாவட்டம், நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்கு மு.செல்லையா, உஷா ராமன், சோனா.வெ.வெங்கடாசலம்,.ச.செல்வராஜ், ப.கீதா ஆகியோர்  அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

திருநெல்வேலி உதவி ஆணையரால் இன்று (05.11.2025) அறங்காவலர் குழுவுக்கான தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது .  தேர்தலில்  மு.செல்லையா 5 வாக்குகள் பெற்று ஒரு மனதாக அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அ

அறங்காவலர் குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டவுடன்  உதவி ஆணையர் முன்னிலையில் அறங்காவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். திருக்கோயில் செயல் அலுவலர், திருநெல்வேலி மேற்கு சரக ஆய்வாளர், திருக்கோயில் கண்காணிப்பாளர், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் உடன் இருந்தனர்.

More News >>