அம்பை அருகே புத்தம் புது டாஸ்மாக் கடை திறப்பு : எதிர்ப்பு தெரிவித்த பெண்களை பிடித்து சென்ற போலீசார்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பெண்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் இன்று கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய மதுக்கடை திறக்கப்பட்டால் இளைஞர்கள் மது அருந்துவதால் , பிரச்னைகள் ஏற்படுமென கூறி, கடையை உடனடியாக மூடுமாறு வலியுறுத்தினர். கடையின் படிக்கட்டுகளில் அமர்ந்து நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் மற்றும் பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்பாது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. பின்னர், போலீசார் சுமார் 25 பெண்கள், 15 ஆண்கள் உட்பட மொத்தம் 40 பேரை கைது செய்து, அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

More News >>