பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளியவர் மோடி - சாடும் மன்மோகன்

நீண்ட நாள்களுக்குப் பின் களத்தில் இறங்கியுள்ளார் நம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

’இன்று நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குழைத்து நாட்டை மிகமோசமான நிலைக்குத் தள்ளியுள்ளார் பிரதமர் மோடி’ என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகா பொதுத்தேர்தல் பிரச்சாரக் களம் சூடுபிடித்து வரும் வேளையில் ஆய்வுப்புர்வமாக புள்ளிவிவரங்களுடன் களம் இறங்கியுள்ளார் முன்னாள் பிரதமரும் நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்.

பெங்களுரூவில் மன்மோகன் பேசுகையில், “இன்று மக்களுக்கு வங்கித்துறையின் மீது இருந்த நம்பிக்கையே போய்விட்டது. உலகின் மூன்றாவது மிகப்பெரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவின் நிலை இன்று பதாளத்தில் உள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை 110% உயர்த்தியுள்ளார். ஆனால், சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை 67 சதவிகிதம் வீழ்ந்துள்ளது. இதன் மூலம் மட்டுமே ஆளும் பா.ஜ.க அரசு 10 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது.

ஆனால், மக்களுக்கான நலத்திட்டங்கள் எங்கே? கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் வைக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தனது ஒரே ஆட்சியில் செய்து முடித்தவர் மோடி” என சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் மன்மோகன் சிங்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>