கடம்பாகுளத்துக்கு வந்தது மறு வாழ்வு: களமிறங்கிய நிமல் ராகவன் குழு

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர்நிலைகளுள் ஒன்று கடம்பாகுளம். தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரையில் தொடங்கி கடயனோடை, குளத்துக்குடி, வெள்ளரிக்காய்யூரணி, பிரகாசபுரம், மூக்குப்பீறி, ஒய்யான்குடி, கச்சனாவிளை வரை 1835 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்த குளம் இது. ஒரு காலத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த குளத்தில் குளித்து மகிழ்வார்கள். இந்த குளத்தையொட்டி, ஒரு கால்வாய் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது, இந்த கால்வாயும் பராமரிப்பின்றி நாறி போய் கிடக்கிறது. அதோடு, கடம்பாகுளமும் பராமரிப்பு இல்லாமல் போனது.

தற்போது, மிக குறைந்த அளவே தண்ணீர் தேக்கி வைக்க முடிகிறது. குளத்தை தூர் வாறியும் பல ஆண்டு காலம் ஆகிறது. எந்த அரசியல் கட்சியும் பிரமாண்டமான இந்த குளத்தை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில், பிரபல நீர் மேலாண்மை நிபுணர் நிமல் ராகவனின் குழுவினர் கடம்பாகுளத்தை சீரமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான, முதற்கட்ட பணிகள் நாளை காலை 10 மணிக்கு தென்திருப்பேரையில் தொடங்குகிறது. கடலில் பாதி கடம்பா என்பவார்கள். இத்தகைய , பெரிய நீர்நிலைகள் நல்லபடியாக தூர் வாறப்படுவது ,விவசாயிகளுக்கு மிகுந்த பலனளிப்பதாக இருக்கும்.

More News >>