ஓராண்டில் இல்லாத வீழ்ச்சி - அதல பாதாளத்தில் ரூபாயின் மதிப்பு

கடந்த ஓர் ஆண்டில் இல்லாத வீழ்ச்சியை இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சந்தித்துள்ளது.

உலகச் சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம் எனப் பல காரணிகளாலும் இந்தியப் பங்குச்சந்தை நிதியாண்டின் தொடக்க நாளில் வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 292.76 புள்ளிகள் உயர்ந்து 35,208 புள்ளிகளாகவும் தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 97.25 புள்ளிகள் உயர்ந்து 10,715 புள்ளிகளாகவும் நின்றது.

இந்தியப் பங்குச்சந்தை வளர்ச்சிப் பாதையில் இன்றைய வர்த்தக நேரத்தை நிறைவு செய்திருந்தாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்துள்ளது.

இன்றைய வர்த்தக நேர முடிவில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.18 ரூபாயாக வீழ்ந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பிபரவரி மாதம் கடைசியாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்தது. அதன் பின்னர் கடந்த ஓராண்டு காலமாக ரூபாயின் மதிப்பு ஏறுமுகத்தில்தான் இருந்தது.

ஆனால், சர்வதேச அளவில் கச்சாவின் மதிப்பு உயர்ந்ததால், அமெரிக்க டாலரின் மதிப்பு உச்சத்திலேயே நீடிக்கிறது. மேலும் அமெரிக்கப் பொருளாதாரம் இதர நாடுகள் எட்டாத முடியாமல் உயரத்தில் திடமாக தொடர்ந்து நீடிப்பதாலும் கச்சா எண்ணெய் வியாபாரத்தில் அமெரிக்காவே அதிகாரத்தில் இருப்பதால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்துள்ளது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>