மார்த்தாண்டத்தில் மத நல்லிணக்க அமைப்பு சார்பில் சிங்காரத்தோப்பு ஊர்வலத்தை முன்னிட்டு கருத்தரங்கம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இயங்கி வரும் மாநில மத நல்லிணக்க அமைப்பின் சார்பாக சிங்காரத் தோப்பு புனிய யாத்திரை சுவாமி தோப்பு முதல் திருவனந்தபுரம் வரை நடைபெறகிறது. இதனை  நாளை ( நவம்பர் 17)மாலை 6 மணிக்கு மாநில மத நல்லிணக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பால பிரஜாபதி அடிகளார் தொடங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து, மார்த்தாண்டம் கொடுங்குளம் சாலையிலுள்ள ஐயா வைகுண்டர் தருமபதியில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் சிந்துகுமார், பொதுசெயலாளர் கொடுங்குளம் ராஜேந்திரன், மார்த்தாண்டம் ஐயா வைகுண்டர் தருமபதியை சேர்நத கலாராணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், விளவங்கோடு எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் மற்றும் புதிய மக்கள் தமிழ் தேச கட்சியின் நிறுவுனர் செந்தூர் எம்.எஸ். மகராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 

More News >>