நாளை கார்த்திகை மாதம் : தூத்துக்குடியில் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை அமோகம்
கார்த்திகை மாதம் நாளை பிறப்பதை முன்னிட்டு தூத்துக்குடியில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்களுக்கு தேவையான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
நாளை கார்த்திகை மாதம் பிறக்கிறது . இதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டு, நாளை மண்டல பூஜை துவங்குகிறது. மண்டல பூஜைக்காக ஏராளமான பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து வருகிற ஜனவரி 15ஆம் தேதி ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சென்று வழிபாடு நடத்துவர் .
இதற்காக, தூத்துக்குடி சிவன் கோவில் அருகே உள்ள பல்வேறு பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஐயப்ப பக்தர்களுக்கு அணியக்கூடிய துளசி ,சந்தனம், ருத்ராட்ச மாலைகள், ஐயப்பன் புகைப்படங்கள், ஐயப்பன் டாலர் , ஐயப்பன் பாடல் புத்தகங்கள் மேலும் பக்தர்கள் அணியக்கூடிய ஊதா மற்றும் கருப்பு நிற வேஷ்டி மற்றும் துண்டுகள் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் விற்பனை அமோகமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்