அமெரிக்காவை கட்டமைத்தவர்கள் இந்தியர்கள்- அமெரிக்க மாணவன் ஆய்வு

’அமெரிக்க என்னும் நாட்டைக் கட்டமைத்தவர்களில் முக்கியப் பங்கு இந்தியர்களுக்கு உள்ளது’ என அமெரிக்க மாணவனின் ஆய்வு ஒன்று வெளிப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள செயின்ட் லாரன்ஸ் பல்கலைக்கழக மாணவர் தன்வீர் காலோ. இவர் அரசு மற்றும் வரலாறு படிப்பில் ஆய்வு மாணவராக உள்ளார். இவர் அமெரிக்க முதலாம் உலகப்போர் நினைவு கூட்டமைப்புடன் இணைந்து முதலாம் உலகப் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாகப் போரிட்ட பெரும்பான்மையான அமெரிக்கவாழ் வெளிநாட்டவர்களுள் இந்தியர்கள் முக்கியமானவர்கள் என ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்.

1917-ம் ஆண்டு முதல் உலகப்போரில் பங்கேற்ற முதல் டர்பன் மனிதர் என்ற பெருமயைப் பெறுகிறார் அமெரிக்கவாழ் இந்தியரான டாக்டர். பகத் சிங் திண்ட். இவரைப் போல் பல இந்தியர்கள் அமெரிக்காவுக்காக முதலாம் உலகப் போரில் பங்கேற்றுள்ளனர் என்ற வரலாற்று உண்மையை தன் ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் மாணவர் காலோ.

மேலும் அவர் கூறுகையில், “இன்று அமெரிக்கவாழ் இந்தியர்கள் பலர் விசா பிரச்னையால் இருப்பிட நிலையை தக்கவைக்கவே சிரமப்படும் சூழல் உள்ளது. ஆனால், அமெரிக்கா என்னும் நாட்டைக் கட்டமைத்து தந்து உதவியவர்களில் இந்தியர்கள் முக்கியமானவர்கள்” எனக் கூறுகிறார்.

இவரது ஆய்வு மேலும் பல அமெரிக்கவாழ் இந்தியர்களின் அமெரிக்காவுக்கான பங்களிப்பை விரிவாக விளக்குகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>