தலைநகர் டெல்லியை தாக்கியது புழுதி புயல்
உத்தர பிரதேசம்,ராஜஸ்தானின் கிழக்கு பகுதியிலும் புழுதி பயங்கார புயலால் வட மாநிலம் முழுவதும் பேரழிவை சந்தித்தது. இந்த புயல் மழையால், வீடுகளில் இருந்த மக்கள் இடர்பாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
அப்பகுதியில் பலர் வீடுகளை இழந்து, வேறு பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புழுதி புயலில் சிக்கி கடந்த சில நாட்களில் மட்டுமே 129 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது, தலைநகர் டெல்லியிலும் புழுதி புயல் தாக்கியது. தலைநகர் இருளில் மூழ்கியது. புயலின் காரணமாக காற்றின் வேகம் பலமடங்கு அதிகாமக வீசுகிறது. இதனால் இடி, மின்னலுடன், பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார். புழுதி புயலால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர். பல்வேறு மீட்புக் குழுவினர் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
டெல்லியில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைளில் அரசு அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றன. அதிகமாக காற்று வீசினால் மெட்ரோ ரயில் நிறுத்தப்படும் என அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com