உங்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டோம்- அதிகாரிகள் வெளிப்படையாக கூறுவதாக டாக்டர்.கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
திருநெல்வேலியில் தேவேந்திர குல மக்கள் மற்றும் விழிம்பு நிலையில் வசிக்கும் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர், தெருவிளக்கு, வாருகால், மயானம் உள்ளிட்ட வசதிகள் செய்தி கொடுக்கப்படவில்லை எனறு கூறி நேற்று புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பபாட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி கலந்து கொண்டு, மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளை கடுமையாக கண்டித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, '' பல பகுதிகளில் கழிப்பிட வசதிகள் கட்டப்பட்டு ஒரு ஆண்டு ஆன பின்னரும் திறக்கப்படவில்லை. ஏனென்றால்,தண்ணீர் வசதி அங்கு செய்யப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் பல கோடிக்கு பட்ஜெட் போடப்படுகிறது. சென்னையில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தேவேந்திர குல வேளாள மக்கள் பல குடியிருப்புகளில் வசிக்கிறார்கள். அங்கும், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டால், தண்ணீர் வசதி இல்லை. ஆளும் கட்சியின் மேயருக்கும், கவுன்சிலர்களும் அலட்சியமாகவே உள்ளனர்.
அதிகாரிகளும் பாரபட்சம் காட்டுகிறார்கள். ஊராட்சி பகுதிகளில் இது போன்று கொடுமைகளை இன்னும் அதிகமாகவே தேவேந்திர குல மக்கள் அனுபவிக்கின்றனர். இவர்கள், நாங்கள் உங்கள் பகுதிக்கு ஒன்றும் செய்ய மாட்டோம் என்று வெளிப்படையாகவே கூறுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்