பாளையங்கோட்டையில் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் பங்கேற்பு

பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் இன்று யூனியன் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் வக்கீல் முரளிதரன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் நெல்லையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பாளையங்கோட்டை மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் போர்வெல் கணேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.டி சுபாஷ் தங்க பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாளையங்கோட்டை யூனியனுக்கான நியமன உறுப்பினர் பதவியேற்றுக்கொண்டார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சரஸ்வதி செல்வ சங்கர், நம்பிராஜன், ராமகிருஷ்ணன், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க தொண்டரணி துணை அமைப்பாளர் சிவந்திபட்டி இசக்கி பாண்டியன், போர்வெல் சுபாஷ் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர் ராஜாராம் பேசுகையில், ''திருவேங்கடநாதபுரம் குன்னத்தூர் பஞ்சாயத்தில் அங்குள்ள சமுதாயக் கூடத்தில் ஆண்டுதோறும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த காலகட்டங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மண்டபத்தை ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. இனிவரும் காலங்களில் நெல் கொள்முதல் நிலையத்தை ஊருக்கு வெளிப்புறமாக லாரிகள் வந்து செல்ல வசதியான இடத்தில் அமைத்திட வேண்டும் என்று கலெக்டரை வலியுறுத்தி கோரிக்கை வைக்கப்பட்டது.

More News >>