மக்களுக்கு ஓர் நற்செய்தி... தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் காரணமாக, உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், “வட உள் கர்நாடகம் முதல் தென் உள் கர்நாடகம் வரை நீடிக்கும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.

உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் அவ்வப்போது மேகமூட்டமாகக் காணப்படும்.

வெப்பநிலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக திருத்தணியில் 106 டிகிரி வெப்பநிலையும், திருச்சியில் 104 டிகிரியும் வேலூரில் 102 டிகிரியும் மதுரையில் 101 டிகிரியும் சேலம், பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, தருமபுரி, கடலூர் ஆகிய இடங்களில் 99 டிகிரியும், சென்னை விமானநிலையத்தில் 98 டிகிரி வெப்பநிலையும் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் வெயிலால் தவித்துவரும் தமிழக மக்களுக்கு ‘மழை பெய்யும்’ என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை தரும் நற்செய்தியாக அமைந்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>