தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ -  ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்ற ஜாக்டோ -  ஜியோ அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஜாக்டோ -  ஜியோ போராட்டம் காரணமாக தலைமை செயலகத்தை சுற்றி 2000 போலீஸ் பாதுகாப்பு பணியில், சென்னை கடற்கரை சாலையில் 6000 போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் ஜாக்டோ -  ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் வந்த போராட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் கீழ்சீவல்பட்டி அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்தோரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக இவர்களை கைது செய்துள்ளனர்.

ஏற்கெனவே, ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை நேற்று முன்தினம் முதலே கைது செய்தனர் என்பது குறிபிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>