கூடன்குளம் அருகே ஆவுடையாள்புரத்தில் மூதாட்டியிடம் தாலிசெயின் பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் ஆவுடையாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரின் மனைவி மூக்கம்மாள் (வயது 70)  வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் வீட்டுக்குள் நுழைந்து, கழுத்தில் இருந்த சுமார் 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் கிடைத்ததும், கூடன்குளம் காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காவல்துறையினர் வீட்டை சுற்றிய பகுதிகளை ஆய்வு செய்தனர். அதோடு, அருகிலுள்ள வீடுகளில் வசித்த மக்களிடம் தகவல்களை சேகரித்தனர். மேலும், சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

குற்றவாளியை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை  மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் ஆவுடையாள்புரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>