கீ போர்டு வாங்கிக் கொடுத்து மாணவியிடத்தில் சில்மிஷம் : ஏரலில் பங்குந்தை கைது
ஏரல் அருகே கீபோர்டு வாங்கி கொடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை ; பங்குத்தந்தை போக்சோவில் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஒத்தாசை மாதா ஆலயத்தில் பன்னீர்செல்வம் ( 69) என்பவர் பங்குதந்தையாக உள்ளார். இந்த ஆலயத்தில் மாணவ, மாணவிகளுக்கு பாடல், கீபோர்டு வாசித்தல் போன்ற பயிற்சி தனி ஆசிரியை மூலமாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பங்குவை சேர்ந்த மாணவ மாணவிகள் பயிற்சி பெறுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் , கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் ஏழ்மையான மாணவிக்கு பங்குத்தந்தை பன்னீர்செல்வம் கீ போர்டு வாங்கி கொடுத்து உள்ளார். இதனால், பங்கு தந்தைக்கு நன்றி சொல்ல அவரின் இல்லத்துக்கு மாணவி சென்றுள்ளார்.
அப்பேது, மாணவியிடம் பங்குத்தந்தை பன்னீர்செல்வம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி தனது தாயாருடன் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் போலீசார், பன்னீர்செல்வம் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்
இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.