திடியூரில் விழுந்த ஓட்டை : மக்கள் பகீர்

திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை வட்டம் திடியூர் கிராமத்தில் மக்கள் வெள்ள வடிநீர் கால்வாய்  மதில் சுவரில் பெரிய அளவிலான ஓட்டை விழுந்து தற்போது வெள்ள நீர் வெளியாகி வருகிறது.

அதிர்ஷ்டவசமாக மக்கள் வசிக்கும் பகுதியை தவிர்த்து வேறு இடத்தில் ஓட்டை விழுந்துள்ளது.  தற்போது, கிராமத்தில் வெள்ளநீர் சூழவில்லை.  அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று முயற்சி செய்து சோதித்துப் பார்த்த போதிலும் இந்த ஓட்டையை அடைக்க முடியவில்லை என்ற தகவல் வருகிறது.  மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் மக்கள் மற்றும் விவசாயிகள் வேண்டுகோள்

More News >>